Mon, Dec5, 2022

#Trending

மாப்பிள்ளை தோழனுடன் முதலிரவு.. விடிகாலையில் மணமகள் அலறல்..

சீனாவில் குவாங்ஸி மாகாணத்தில் நோப்போ கவுண்டியில் வூ என்பவருக்கும் ஹூவாங் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமகன் வூ மற்றும் அவரது உறவினர்கள், மாப்பிள்ளை தோழன் ருவான் ஆகியோர் மணப்பெண் வீட்டில் தங்கி இருந்தனர். இரவு அவுட் ஹவுசில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு அறைக்கு சென்றார் மணப்பெண் ஹூவாங்.

மறுநாள் காலையில் கண்விழித்து பக்கத்தில் படுத்திருந்தவரை பார்த்து அலறி அடித்து ஓடினார். காரணம் அவரது அறையில் இருந்தது மாப்பிள்ளை தோழன் ருவான். அதன்பின் மணப்பெண் வீட்டில் பரபரப்பு நிலவியது. ருவான் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக மணப்பெண் ஹூவான் புகார் கூறினார்.

பின்னர் வீட்டு பெரியவர்கள் பேசி, தவறுதலாக மணப்பெண்ணுடன் முதலிரவு அன்று உறவு கொண்டதற்காக ரூ.2லட்சத்து 17 ஆயிரம் தர வேண்டும் என்று ருவானிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ருவான் மறுத்துவிட்டார்.

இதையடுத்து போலீஸில் மணப்பெண் ஹூவாங் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ருவாண் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பலாத்கார குற்றத்தின் கீழ் ருவானுக்கு தண்டனை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்து விட்டது. மேலும் அந்த சம்பவத்தின் போது மாப்பிள்ளை எங்கே இருந்தார், மனைவியை அவர் தேடவில்லையா, மணப்பெண் ஹூவான் சுயநினைவில் தான் இருந்தாரா அல்லது மது அருந்தி போதையில் இருந்தாரா, நண்பரின் மனைவி என்று தெரிந்தும் மாப்பிள்ளை தோழன் அவருடன் உறவு கொண்டது எப்படி என்று பல கேள்வி எழுப்பி உள்ளனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities