Mon, Dec5, 2022

#Trending

மீண்டும் வெளியாகிறது லவ் டுடே

லவ் டுடே

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ளதாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.

அதில், லவ் டுடே மீதான மிகப்பெரிய அன்பைப் பெற்று, அதை தெலுங்கு பார்வையாளர்களிடம் கொண்டு வருகிறோம். தயாரிப்பாளர் #தில்ராஜு சாருடன் இணைந்திருப்பது மதிப்புக்குரியது. தெலுங்கில் மிக விரைவில் வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிக்கும் வாரிசு படத்தையும் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி15 படத்தையும் தில்ராஜு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities