Malayagam
Home » முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!

தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் மிகச் சிறந்த பாடகியாக இருந்து வருபவர் ஷ்ரேயா கோஷல்.

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது மகனின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தாலும் முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் அளவுக்கு உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை ஸ்ரேயா கோஷல் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் தனது மகன் பேசுவது போன்று ஒரு பதிவையும் அவர் செய்துள்ளார்.

எனது பெயர் தேவ்யான். நான் இப்போது ஆறு மாதம் ஆகி உள்ளேன். நான் தற்போது மிகவும் பிசியாக பாடல்கள் கேட்டுக் கொண்டும் புத்தகம் படித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறேன். பெரும்பாலான நேரங்களை எனது அம்மாவுடன் கழிக்கின்றேன். அவர் என்னை கவனமாக பார்த்துக் கொள்கிறார். உங்கள் அனைவரது அன்பும் ஆசியும் எனக்கு தேவை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed