காதலன் உடன் உல்லாசமாக இருந்த நிலையில் கர்ப்பம் அடைந்த பள்ளி மாணவி ஒருவர், யூ டியூப் மூலமாக பிரசவம் பார்ப்பதைப் பல முறை பார்த்துத் தெரிந்துகொண்டு, தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்படியான சூழலில், கடந்த காலங்களில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அந்த மாணவி, வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், தனது வீட்டின் அருகே வசித்து வந்த 21 வயது இளைஞருடன் அந்த மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பழக்கம், அவர்களுக்குள் காதலாக மாறிய நிலையில், அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இப்படியாக, காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததின் காரணமாக, அந்த பள்ளி மாணவி கர்ப்பம் அடைந்து உள்ளார்.
அப்போது, “உனக்கு 18 வயது வந்த பிறகு, உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, அந்த இளைஞர் தனது காதலியிடம் சொல்லிவிட்டு, அவரை அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படியான சூழலில் தான், மாணவி கர்ப்பம் அடைந்ததால், தனது கர்ப்பம் பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் எதுவும் கூறாமல், அதனை அப்படியே மறைத்து வந்திருக்கிறார்.
அத்துடன், “எனக்கு உடல் நிலை சரியில்லை” என்று மட்டும் அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவியை 2 முறை மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்று உள்ளனர்.
எனினும், அவர் கர்ப்பமாக இருந்ததை மருத்துவர்கள் அப்போது கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான், அந்த மாணவிக்கு பிரவச வலி வந்ததால், எடுத்து என்ன செய்வது என்று யோசித்த அந்த 17 வயது பள்ளி மாணவி, “பிரசவம் பார்ப்பது எப்படி?” என்பது பற்றி, யூ டியூப்பில் வீடியோ பார்த்துத் தெரிந்துகொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, தனக்கு தானே அந்த மாணவி தனது வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளார். அப்போது, அந்த மாணவிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து உள்ளது.
இதனையடுத்து, எதுவும் தெரியாதது போல், அந்த மாணவி தனது குழந்தையை, வீட்டின் மாடியில் வைத்து விட்டு, இயல்பாக இருப்பது போல், தனது பெற்றோர் வசிக்கும் கீழ் தளத்திற்கு வந்திருக்கிறார்.
இப்படியாக 3 நாட்கள் சென்ற நிலையில், மேல் மாடியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளது. இதனைக் கவனித்த சிறுமியின் பெற்றோர், அங்கு மாணவியின் அறைக்குள் சென்று பார்த்த போது, அங்குக் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
உடனடியாக தனது மகளை அழைத்து குழந்தை பற்றி அவரது பெற்றோர் விசாரித்து உள்ளனர். அதன்படி, மாணவியின் வீடு அருகே உள்ள 21 வயது இளைஞனின் காதல் விசயம் பற்றி அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டுப் பதறிப்போன மாணவியின் பெற்றோர், உடனடியாக மாணவியும், அவரது குழந்தையும் அங்குள்ள மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, குழந்தை நலமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், மாணவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 21 வயது இளைஞனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.