Mon, Dec5, 2022

#Trending

ரம்பை, ஊர்வசியை மிஞ்சிய மாளவிகா மோகனன்… ஷாக்காக்கும் ரசிகர்கள்

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “பேட்ட“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிப்போனார்.

இதையடுத்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்ஷுடன் “மாறன்“ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் விரைவில் வெளிவரும் நிலையில் பாலிவுட் சினிமாவிலும் தனது வருகையை அவர் பதிவு செய்திருக்கிறார்.

பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் “யுத்ரா“ படத்தில் இவர் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை மாளவிகா மோகனன் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் “தேவலோகத்தில் இருந்து பூவுலகில் உதித்த ஊர்வசி“ என்ற கேப்ஷனுடன் ஹாட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளோடு புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities