16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

மலையகத்தில் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மகா சிவராத்திரி விரதம்

இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் 11.03.2021 அன்று பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீடத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றன.

இப்பூஜையில் விநாயகர் வழிபாடு, பாலாபிசேகம், தேன் அபிசேகம், பஞ்சாமிர்த அபிசேகம், சங்காபிசேகம், திரவிய அபிவிசேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றதுடன் இரவு முழுவதும் நான்கு பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

அதனை தொடர்ந்து சிவராத்திரி விரதத்தின் சிறப்பு தொடர்பாக ஆலய அறங்காவலர் சக்திவேல் சந்திரமோகன் அவர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றது.

இவ்விஷேட பூஜை வழிபாடுகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்