முதன்முதலாக இந்த 5வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியையே டோட்டலாக காமெடியாக கொண்டு செல்வதற்கு முழுக்க முழுக்க இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் தேர்வு தான் என்று கூற வேண்டும்.
குறிப்பாக பிரியங்கா வேற லெவல் காமெடி செய்து தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் அவர் பிக்பாஸை கலாய்க்கும் பாணியே தனியாக உள்ளது.
இதுவரை பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஒரு மரியாதை மதிப்பு இருந்தது. ஆனால் அவருடைய இமேஜை ஒட்டுமொத்தமாக போட்டு உடைக்கும் வகையில் பிக்பாஸை சரமாரியாக கலாய்த்து வருகிறார் பிரியங்கா.
மேலும் அவர் நேற்றைய நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் சீசன் 5 என்பது தவிர்க்க வேண்டிய ஒரு சீசன் என்றும் நீங்க ஒரு ரவுடி கூட்டத்தை இங்கே கொண்டுவந்து விட்டு விட்டீர்கள் என்றும், இங்கே இருக்கும் போட்டியாளர்கள் எல்லாரும் சில்லிப்பயல்கள் என்றும் இதையெல்லாம் பார்த்து பிக்பாஸ் தனது பதவியை ராஜினாமா பண்ணுவாரு’ என்றும் கூறுகிறார்.
அதன் பின்னர் அங்கே நமீதா வரும்போது ’பிக்பாஸ்க்கு நமீதா மீது ஒரு கண் இருக்கிறது என்று கேலி செய்ததோடு, நமீதாவும் பிக்பாஸை கண்மணி என்று தான் கூப்பிடுகிறார் என்றும், ஆனா போன சீசனில் நிஷாவை வச்சிருந்த பாரு, உன்னை நான் வேற லெவல்ல வச்சு இருந்தேன், ஆனா உனக்கும் நிஷாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரியை என்னால ஜீரணிக்க முடியல என்றும், ஆனா இந்த சீசன்ல்ல நிஷாவில் இருந்து நமீதா ரேஞ்சுக்கு நீங்கள் டெவலப் ஆகியிருக்கிங்க, உங்களை பாராட்டுகிறேன் என்று வேற லெவலில் கலாய்த்துள்ளார்.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை உலகிலேயே ஒரு சமையல் நிகழ்ச்சியை காமெடியாக மாற்றியது போல், பிக்பாஸ் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க காமெடியாக மாற்றிய பெருமை பிரியங்காவுக்கே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.