Malayagam
Home » ரூம் போட்டு காதல் ஜோடி உல்லாசம்! படுக்கையில் சரிந்து இளைஞர் பலி!

ரூம் போட்டு காதல் ஜோடி உல்லாசம்! படுக்கையில் சரிந்து இளைஞர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தனது தோழியுடன் உடலுறவில் ஈடுபட்ட 28 வயது இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.

நாக்பூரை சேர்ந்தவர் அஜய் பார்டேகி (28). இவர் டிரைவராகவும் வெல்டிங் டெக்னீசியனாகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிந்துவாடா பகுதியில் செவிலியராக இருக்கும் 23 வயது பெண்ணுக்கும இடையே காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 3 ஆணடுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் பேஸ்புக்கில் பழகியுள்ளனர். பிடித்து போகவே பார்டேகி, அந்த பெண்ணின் தாயிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அந்த பெண்ணின் தாய் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். அது போல் பார்டேகியின் வீட்டிலும் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தனர். இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணை நாக்பூரில் உள்ள சோனெர் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு பார்டெகி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பார்டெகியும் அந்த செவிலிய பெண்ணும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அரை மணி நேரம் கழித்து திடீரென படுக்கையில் பார்டெகி மயங்கி விழுந்துவிட்டார்.

அந்த பெண், செவிலியர் என்பதால் தன்னால் இயன்ற வரையில் பார்டெகியை எழுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து லாட்ஜ் நிர்வாகத்திடம் பார்டெகி மயங்கியுள்ளது குறித்து கூறினார். அவர்கள் போய் அறையில் பார்த்த போது பார்டெகி அசைவின்றி கிடந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் ஏற்கெனவே பார்டெகி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த பெண்ணிடமும் லாட்ஜ் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினர். பார்டெகி எந்தவித போதை பொருளையும் பயன்படுத்தவில்லை. அவரிடமும் இருந்தும் எந்த போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

உடலுறவின் போது பார்டெகிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கபபடுகிறது. உடலுறவின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது என்பது மிகவும் அரிதானது. உடலுறவின் போது இதய துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இதுவும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பார்டெகிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed