Mon, Dec5, 2022

#Trending

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

பிரபல தெலுங்கு நடிகை அனு இமானுவேல் விஷாலின் துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், அனு இமானுவேல் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.

தற்போது பேட்டி அளித்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனு இமானுவேல்.

”நான் அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடித்ததால் அவரை காதலிக்கிறேன் என வதந்தி பரப்பியுள்ளனர். அதெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. என் அம்மா காதல் வதந்தியை பார்த்து அழுது விட்டார். அம்மாவின் வேதனையை பார்த்து நான் வருத்தப்பட்டேன். திரைப்படத்திற்கு முன் எனக்கு அல்லு சிரீசை தெரியாது. அவரை சந்தித்ததுகூட கிடையாது. படத்தின் பூஜையன்று மட்டும்தான் அவரை சந்தித்தேன்” என்று வருத்தம் வெளியிட்டுள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities