மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்து வருகிறது படக்குழு.
டெல்லியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியின்போது சீயான் விக்ரமின் கன்னத்தை தொட்டார் ஐஸ்வர்யா ராய். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.
அதை பார்த்த ரசிகர்களோ, விக்ரம் கன்னத்தை ஐஸ்வர்யா ராய் ஏன் தொட்டார் என தெரியவில்லை. ஆனால் பார்க்க ரொம்ப க்யூட்டாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
இது தவிர்த்து ஐஸ்வர்யா ராயை பாராட்டி விக்ரம் பேசிய வீடியோவும் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
முன்னதாக விளம்பர நிகழ்ச்சியின்போது தஞ்சை பெரிய கோவில் மற்றும் நம் கலாச்சாரம் பற்றி விக்ரம் அருமையாக பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவால் பொன்னியின் செல்வன் படத்திற்கு வட இந்தியாவில் பெரும் ஹைப் கிடைத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் பார்க்கப் போகிறோம் என்று வட இந்தியர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
Aishwarya Rai touching Vikram's cheek, ear.. Whatever be the reason, it is cute 🥺❤🥰. #AishwaryaRaiBachchan #ChiyaanVikram𓃵 #PonniyinSelvan1 #PonniyinSelvan pic.twitter.com/QU9zdpex6D
— Mohabbatein #Jawan All Time Blockbuster (@sidharth0800) September 27, 2022