HomeசினிமாCinema Newsவிஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது?

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது?

விஷால் நடிப்பில் உருவான’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடிப்பில் து.பா,சரவணன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வீரமே வாகை சூடும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பொங்கல் தினத்தில் அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வெளியாவதால் இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular