கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.
அந்தப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து இருப்பார். அண்மையில் இவருக்கும் தொழிலதிபர் சஞ்சய்க்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் மாலத்தீவில் இருந்து வித்யுலேகா பகிர்ந்துள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர்.
தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வித்யுலேகா. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
அதனை தொடர்ந்து அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா.
மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வித்யூலேகா இணையத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வித்யூலோகா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.