HomeசினிமாCeleb Newsஹாட் ரெட் சில்லி… பூஜா ஹெக்டே வேறலெவல் போட்டோஸ் !

ஹாட் ரெட் சில்லி… பூஜா ஹெக்டே வேறலெவல் போட்டோஸ் !

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட பூஜா ஹெக்டே மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் இவர், 2010ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா என்ற அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்றார்.

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. தமிழ் சினிமாவில் வந்த முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இருப்பினும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராமல் தோல்வியைத் தழுவியது.

- Advertisement -

தெலுங்கு பக்கம் சென்ற இவரை, தெலுங்கு திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிந்த வரவேற்றது. இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதைஅடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரமலு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து பூஜாவை புகழின் உச்சியில் ஏற்றிவிட்டது.

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகி உள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட பூஜா ஹெக்டே, சிவப்பு நிற ஜிம் ஷூட்டில் அனைவரும் வியந்து போகும் அளவுக்கு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார்.

பூஜா ஹெக்டே தலை முதல் கால் வரை சிவப்பு நிற உடையில், இடுப்பில் சிவப்பு நிற ஜாக்கெட்டை ஸ்டைலாக கட்டியுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular