Mon, Dec5, 2022

#Trending

1 ஹீரோயின் இல்லை.. 2 ஹீரோயின்.! மாஸ் காட்டும் ஜீவா.!

தமிழ் சினிமாவில், வித்தியாசமான கதைகளை தேந்தெடுத்து நடிப்பவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியான ராம், ஈ, கற்றது தமிழ், கோ ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், சமீப காலமாக ஜீவா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து, மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஜீவா வித்தியாசமான கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், காதல்-நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான கதையில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

1 ஹீரோயின் இல்லை.. 2 ஹீரோயின்.! மாஸ் காட்டும் ஜீவா.!

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில், வி.டி.வி.கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், சித்திக், மொட்ட ராஜேந்திரன், சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜிமிக்கி கம்மல்’ பாடலின் இசையமைப்பாளர் சான் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தநிலையில் , படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக 1 ஹீரோயின் இல்லையாம், மொத்தம் 2 ஹீரோயினாம் . படத்தில் காஷ்மீரா பர்தேசி, பிரக்யா நாக்ரா ஆகிய இருவரும் நடிக்கிறாராம் . படத்தில் கண்டிப்பாக நல்ல பாடல்கள் இருக்கும் எனவே ஜீவா மாஸாக இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் நடனம் ஆடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities