மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். பெண்ணின் கணவர் உடல்நலக்குறைவால் மூன்றாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்த பெண் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் கணேசன் என்பவருடன் நெருங்கி பழகி வந்த பெண் அவரது இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
மகளாக பார்க்க வேண்டிய சிறுமி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
சிறுமி தனது தாயிடம் கூறிவிடுவேன் என சொல்லியதற்கு, அப்படி கூறினால், உங்கள் இருவரையும் அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிடுவேன். பிறகு நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சத்தில் நடந்ததை வெளியில் கூற முடியாமல் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கணேசன் 2 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது பாட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு செய்த விசாரணையில் சிறுமி உண்மையை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின் பேரின் பேரில், காமக்கொடூரன் சமையல் மாஸ்டர் கணேசனை தல்லாக்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.