சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்
2022-ஆம் ஆண்டில் சர்ச்சை மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ் திரையுலக பிரபலங்கள் பட்டியலில் நயன்தாரா, விஷ்ணு விஷால் என பல தமிழ் பிரபலங்கள் உள்ளனர்.
1. நயன்தாரா
இந்த ஆண்டு 2022ல் நயன்தாரா – விக்னேஷ் சிவன்-ற்கு பிரமாண்ட முறையில் நட்சத்திர திருமணம் நடந்துள்ளது. இவரின் திருமணம் பல ஊடகங்களுக்கு செய்தி மழையாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து தாயனார். இந்த சம்பவம் தமிழ் மக்கள் மற்றும் நெட்டிசன் இடையே பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டுள்ளது.
2. தனுஷ்
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தமிழ் மக்கள் இடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்காக ரஜினியின் ரசிகர்கள் தனுஷ்-யை தாக்க முயன்ற சம்பவங்கள் பல உள்ளன. இவர்களின் குடும்ப பிரச்சனை தமிழில் பலர் மத்தியில் பேசப்பட்டது.
2023ல் தங்கம் விலை இப்படித்தான் இருக்கும்.. அலர்ட்டா இருங்க..!
3. ப்ளூ சட்டை மாறன்
யூ டியூப் சேனல் மூலம் தமிழ் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர், ப்ளூ சட்டை மாறன். இவர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தினை விமர்சனம் செய்ததற்காக இவருக்கும் பார்த்திபனுக்கு இடையே மோதல்கள் தொடங்கின.
பின் மாறன் இந்த ஆண்டு கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தினை விமர்சனம் செய்துள்ளார், இதற்காக ஆத்திரம் கொண்ட கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன்-யை விமர்சித்து பல பேட்டிகளில் பேசியுள்ளார்.
4. விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்படும் நடிகர் ஆவார். இவருக்கு ‘தளபதி’என்னும் அடைப்பெயரும் உண்டு.
சினிமாவில் மாஸான வசனங்கள் பேசி பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி முன்னணி முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார், விஜய். இவர் ஒரு வெளிநாட்டு கார் வாங்கி அதற்கு சரியாக வரி செலுத்தாத விவகாரம் தமிழ் சினிமாவில் பலர் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தியது.
5. அஜித்
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி முக்கிய நடிகர் ஆவார். இவர் அடிக்கடி பைக் பயணம் செய்து வருகிறார். இவரின் பைக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இந்த ஆண்டில் பல நாட்கள் ட்ரெண்டிங் ஆகி வந்துள்ளார்.
6. ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி
இந்த ஆண்டு திருமணம் ஆன ரவீந்தர் – மஹாலக்ஷ்மி பற்றி பல பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து பேசி தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளது. இவர்கள் திருமணத்தை பற்றி பல பிரபலங்கள் சர்ச்சையாக பேசியுள்ளனர்.
7. விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகர் ஆவார். இவரின் அரை நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இந்த ஆண்டு சர்ச்சை ஆனது.