Save 20% off! Join our newsletter and get 20% off right away!

வயதான நடிகருக்கு ஜோடியான கயல் ஆனந்தி.!

தமிழ் சினிமாவில், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. இந்த படத்தைத் தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதன் பிறகு, 2018- ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தான் இவருக்கு பெரிய ஒரு பெயரை பெற்று தந்தது என்றே கூறலாம்.

அதன் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள், ராவணக் கூட்டம், கமலி ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி சாக்ரடீஸ் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருணம் செய்து கொண்டார்.

வயதான நடிகருக்கு ஜோடியான கயல் ஆனந்தி.!

திருமணம் செய்துகொண்ட பிறகும் கயல் ஆனந்தி பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில், தற்போது 40 வயதான தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷிற்கு ஜோடியாக “ஒயிட் ரோஸ்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகர் என்பவர் இயக்குகிறார்.

இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் கேஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.