மகனின் கருவை சுமந்த தாய்
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சமீபகாலமாகஅதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மகன்- மருமகளின் கருவை சுமந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
Jeff Hauck என்பவரும், அவரது மனைவியும் நீண்ட ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்துள்ளனர். Jeff Hauck மனைவிக்கு கருப்பை பிரச்சனை இருப்பதால் குழந்தை பெற்றெடுப்பதில் சிக்கல்கள் இருந்துள்ளது.
எனவே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து, அதற்காக Nancy Hauckக்கை அணுகியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பின், Nancy Hauck மகனின் கருவை சுமந்து அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து Jeff Hauck கூறுகையில், அது ஒரு அழகான தருணம், தன் தாயே என்னுடைய கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் நிகழ்வை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்ததில் நெகிழ்ச்சியே என தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைக்கு Hannah என பெயரிட்டுள்ளதாகவும், இருவரும் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.