8 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி தெற்கு தெருவில் வசிக்கும் மாயகிருஷ்ணன், செல்வபழனி தம்பதியின் 8 வயது சிறுமி சாதனா வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாய் செல்வபழனி தூக்கில் தொங்கிய குழந்தையை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேவதானப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து சிறுமி தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.