HomeசினிமாBiggBossபிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் முன்னாள் மனைவி தீபா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் முன்னாள் மனைவி தீபா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. போட்டியாளர்களின் ஒருவராக அபிஷேக் ராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

இவர் தனக்கு திருமணமாகி இரண்டு வருடத்தில் விவாகரத்து ஆகி விட்டதாக தெரிவித்து இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு இவருக்கு தீபா நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2019 இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தீபா நடராஜன் நாங்கள் இருவரும் திருமணம் ஆன புதிதில் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தோம். அந்தப் பேட்டி தற்போதுதான் வைரலாக தொடங்கியுள்ளது.

- Advertisement -

என்னுடைய முன்னாள் கணவர் பெரிய பிளாட்பார்மிற்குள் சென்றுள்ளதால் அவரைப் பற்றி தேடும்போது கூகுளில் இந்த வீடியோ தான் முதலில் வருகிறது.

இதனைப் பார்த்துவிட்டு பலரும் பலவிதமான கேள்விகளை என்னிடம் கேட்கும்போது மன உளைச்சலாக சங்கடமாக உள்ளது. இந்த வீடியோவை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் அந்த நிறுவனம் செவிசாய்க்கவில்லை. தயவு செய்து அந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் மூன்று வருடங்களுக்கு முன்பே நான் நன்றாக யோசித்து இதனால் என்னென்ன பிரச்சினைகள் வரும் அதை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்து தான் விவாகரத்து என்ற முடிவை எடுத்தேன் என தீபா நடராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular