Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சூப்பர் சிங்கர் திருமணத்தில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

அதிலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். சினிமாவுக்கு ஏகப்பட்ட பின்னணி பாடகர்களை ஒவ்வொரு ஆண்டும் எக்ஸ்போர்ட் செய்து வருகிறது.

சூப்பர் சிங்கர் போட்டியாளர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷர்மதா விஸ்வநாத் இருவருக்கும் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. சூப்பர் சிங்கர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மனைவி ஷர்மதா விஸ்வநாத் உடன் இணைந்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நடத்திய இசைக்கச்சேரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அவருடைய மனைவி வயலின் வாசிக்க வெண்ணிலவே வெண்ணிலவே பாடலை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தனது தந்தையைன் அஸ்தியை கரைக்க இமயமலை வரை டூர் சென்று வந்த அபிஷேக் ராஜா ஷாக்கிங் சர்ப்ரைஸாக இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் திருமணத்தை மிஸ் பண்ணாமல் கலந்து கொண்டிருக்கிறார் அபிஷேக் ராஜா.

அபிஷேக் ராஜா அவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சஞ்சீவின் பெயர் வைல்டு கார்டு என்ட்ரிக்கு அடிபட்டு வருவதால் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

சூப்பர் சிங்கர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சூப்பர் சிங்கர் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

அபிஷேக் ராஜா மட்டுமின்றி ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்களும் இவர்கள் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.