தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன் கண் கூசும் அளவிற்கு அண்மையில் கிளாமர் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன். ஆரம்பத்தில், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ போன்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கிளாமர் ரோலில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார்.
இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இவர் நடிப்பில் சென்ற வாரம், வேழம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், தற்போது ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸில் பிஸியான நடித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர், சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இவரை சூழ்ந்து கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது உள்ளாடை வெளியே தெரியும் துணியில் கவர்ச்சி காட்டி ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இவரது, கிளாமர் புகைப்படம் பார்த்த இளசுகள் சொக்கி போயி லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.