பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. மும்பையை பூர்விகமாக கொண்ட குஷ்பு பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக கெரியரை தொடங்கினார்.
தொடர்ந்து பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த நடிகை குஷ்பு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
அரசியல் பிரமுகராகவும் வலம் வரும் குஷ்பு, கடந்த சில நாட்களகாக அதிகளவு எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிக்கென மாறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வரும் போட்டோவை வெளியிட்டுள்ளார் குஷ்பு.
கையில் ட்ரிப்ஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில் ரொம்பவே சோர்வாக உள்ளார் நடிகை குஷ்பு. மேலும் அந்த போட்டோவுக்கு, முதுகு தண்டுவடப் பகுதிக்கு கீழ் மிகவும் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு பணிக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த போட்டோவில் பார்க்கவே பரிதாபமாக உள்ளார் குஷ்பு, இதனை பார்த்த ரசிகர்கள் பதறியுள்ளனர். நடிகை குஷ்பு விரைவில் நலம்பெற வேண்டும் என கூறியுள்ள ரசிகர்கள், அவர் விரைவில் குணமாக பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். நடிகை குஷ்பு தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.