Malayagam
Home » நடிகை பூர்ணாவின் திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!

நடிகை பூர்ணாவின் திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!

Actress Poorna Engagement

Actress Poorna Engagement : சவரக்கத்தி படம் மூலம் புகழ்பெற்ற நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அடுத்து நண்பர்கள் திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷாம்னா காசிம் என்னும் இயற் பெயரை கொண்ட பூர்ணா நடனக் கலைஞர் மற்றும் மாடலாக அறிமுகமானவர்.. 2004 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான மஞ்சு பொளொரு பெண்குட்டியில் நடிகையாக என்ட்ரி கொடுத்து 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actress Poorna Engagement

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமான பூர்ணா. அதே ஆண்டு கொடைக்கானல், கந்தக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறிய இவர் . தலைவி மற்றும் த்ரிஷ்யம் 2 போன்ற படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

சீரியல்ல நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஜோடி!

33 வயதான இவர் தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் பூர்ணா நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

Actress Poorna Engagement

இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது அடுத்த வாழ்க்கைப் பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமானது” எனப் பதிவிட்டுள்ளார்.

நிச்சயதார்த்த விழாவில் இருந்து சில படங்களை வெளியிட்டுள்ள பூர்ணாவிற்கு அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர். அதன்படி நடிகை பிரியாமணி, நடிகர் பாரிஸ் லக்ஷ்மி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்; ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed