மலையாள சினிமாவில் சின்னத்திரை தொடர்களிலும் படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீ லட்சுமி. பல்வேறு படங்களிலும் தொடர்களிலும் நடித்துள்ளார் இவர் நடன கலைஞரும் கூட. சிறந்த நடனத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.
இவருக்கு திருமணமாகி வினோத் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவு மலையாளத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் ஸ்ரீலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.