அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகை படுகாயமடைந்துள்ளார்.
மாடல் அழகியும் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா, ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். அதைத் தொடர்ந்து வீரபத்ரா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தி ,தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.
நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு தமிழில் படவாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இதனால், மீண்டும் பாலிவுட்டுக்கு சென்றார் அங்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ உஜ்ஜயினியில் உள்ள மகாகால் கோவிலுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கோவிலுக்கு செல்லும் முன் நெற்றியில் மஞ்சள் பூசி பக்தி பரவசத்துடன் இருக்கும் செல்ஃபிகளை பகிர்ந்து இருந்தார். மேலும், வெள்ளை நிற துப்பட்டாவுடன் மெரூன் நிற உடையில் மிகவும் அழகாக இருந்த அந்த போட்டோவுக்கு லைக்குள் குவிந்து வந்தன.
இதையடுத்து, கோவிலுக்கு செல்லும் வழியில் கார் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதாகவும், காலில் காயம் ஏற்பட்டு 5 தையல் போட்டதாகவும் நடிகை தனுஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது ஒரு சாகச நாள் என்றும், கடைசியில் மகாகால் தரிசனம் செய்ததாகவும் கூடிறியுள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.