in , ,

என்னை விட சின்ன பையனை காதலிப்பதில் பிரச்சனை இல்ல: ரஷ்மிகா அதிரடி

தன்னை விட சிறியவரை காதலிப்பதில் ஆட்சேபனை இல்லை என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா பலருக்கும் பிடித்தவராக இருக்கிறார். இந்நிலையில் அவர் காதல் மற்றும் ஆண்களிடம் பிடிக்காத விஷயம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அவர் காதல் பற்றி தெரிவித்த விஷயம் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. காதல் பற்றி ரஷ்மிகா கூறியதாவது, காதலுக்கு வயது முக்கியம் இல்லை.

என்னை விட சிறியவரை காதலிப்பதில் பிரச்சனை இல்லை. நாம் காதலிக்கும் நபர் நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை மாற்ற முயற்சி செய்யக் கூடாது என்றார்.

ஆண்கள் சட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிடுவது எனக்கு பிடிக்காது. ஆண்கள் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வது, உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் சட்டையில்லாமல் புகைப்படம் எடுத்து ப்ரொஃபைல் பிக்சராக வைப்பது தான் பிடிக்கவில்லை என்று ரஷ்மிகா மேலும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் மும்பையில் வீடு வாங்கி அண்மையில் குடியேறினார் ரஷ்மிகா. அவருக்கு துணையாக நாய்க்குட்டி ஆரா இருக்கிறது.

அடிக்கடி ஆராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரஷ்மிகா. கெரியரை பொறுத்தவரை சித்தார்த் மல்ஹோத்ராவின் மிஷன் மஜ்னு பாலிவுட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“அந்த” இடத்தை ரூ13 கோடிக்கு இன்சூர் செய்த உலக அழகி…

கைவிரித்த தயாரிப்பாளர்… நடிகர்களை சிறைபிடித்த ஹோட்டல்