அக்ஷய திருதியை 2023:
அக்ஷய திருதியை 2023 ஏப்ரல் 22 சனிக்கிழமை வருகிறது. புனிதமான இந்த நாளில் நாம் தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். இந்த அற்புத நாளில் நீங்கள் கார், பைக் வாங்க திட்டமிட்டிருந்தால், எந்த நிறத்தில் வாங்கினால் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்: அட்சய திருதியை அன்று மேஷ ராசியினர் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களின் ராசி அதிபதியான செவ்வாய் பகவானுக்கு உகந்த சிவப்பு நிற வாகனத்தை வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் சிவப்பு நிறம் மிகுந்த ஆடையை நீங்கள் அணிவதால் உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நீங்கள் கருப்பு மற்றும் பழுப்பு நிற வாகனம் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: ரிஷப ராசியை சேர்ந்தவர்களை சுக்கிரன் ஆட்சி செய்வதால் அட்சய திருதியை அன்று நீலம், கிரீம் அல்லது வெள்ளை நிற வாகனம் வாங்க வேண்டும். இந்த நிறம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் என்பதால் அற்புத பலன்கள் கிடைக்கும். நீங்கள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வாகனங்களை வாங்க வேண்டாம். ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: மிதுன ராசி அதிபதி புதன் பகவான் ஆள்வதால், உங்கள் ராசிப்படி அட்சய திருதியை அன்று நீங்கள் பச்சை நிறம் அல்லது சாம்பல் நிற வாகனத்தை வாங்குவது மிகவும் சாதகமானதாக இருக்கும். உங்கள் மனம் மிகவும் அமைதியடையும். உங்கள் வாகனத்தால் அனுகூலம் அடைவீர்கள்.
கடகம்: கடக ராசி அதிபதியான மனோகாரகன் சந்திர பகவான் ஆள்வதால், நீங்கள் வாகனம் வாங்கும் முயற்சியில் இருந்தால் வெள்ளை, வெள்ளி கிரீ நிறம், மஞ்சள் ஆகிய நிறங்களில் ஒன்றை தேர்வு செய்வது நல்லது. இது உங்களுக்கு அனுகூலத்தையும், மன அமைதியையும் தரும்.
சிம்மம்: சிம்ம ராசி அதிபதியான பிரகாசமான சூரியன் என்பதால், நீங்கள் அட்சய திருதியை அன்று சாம்பல் நிற வாகனத்தை வாங்கலாம். இந்த வண்ணங்களைப் பயன்படுத்துவது வாழ்க்கையில் உங்களுக்கு நன்மையையும், மன அமைதியையும் தரும்.
கன்னி: புதன் பகவான் ஆட்சி செய்யக்கூடியது கன்னி ராசி. இந்த அட்சய திருதியை நன்னாளில் வெள்ளை, பழுப்பு, பச்சை, நீலம் ஆகிய வண்ண வாகனங்கள் கலந்த அல்லது ஏதேனும் ஒரு நிறத்தில் வாகனம் வாங்கும் போது அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆனால் சிவப்பு நிற வாகனங்களை வாங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
துலாம்: இந்த ராசியை சுக்கிரன் ஆளுகிறான். நீங்கள் நீலம், வெள்ளை, கிரீம் நிற வாகனங்களை வாங்குவதால் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.உங்க வாழ்வில் செல்வம் பெருகும்.
விருச்சிகம்: செவ்வாய் அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினர், அட்சய திருதியை அன்று சிவப்பு அல்லது வெள்ளை நிறை வாகனங்களை வாங்குவதால் நல்ல பலன்களை அடைந்திட முடியும். இந்த நிறத்தை நீங்கள் அணிவதால் உங்களின் தைரியம், வலிமை அதிகரிக்கும்.
தனுசு: குரு பகவான் ஆளக்கூடிய தனுசு ராசியினர் அட்சய திருதியை அன்று ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை அல்லது காவி நிற வாகனங்களை வாங்குவது நல்லது. இந்த நிற வாகனங்களைப் பயன்படுத்துவதால் நீங்கள் பல பிரச்னைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
மகரம்: மகர ராசியை ஆள்பவர் சனி. அட்சய திருதியை அற்புத நாளில் நீங்கள் கார் அல்லது பைக் வாங்க விரும்பினால் கருப்பு, நீலம், வெள்ளை, சாம்பல் நிறத்தில் ஏதேனும் ஒன்றை தேவு செய்து வாங்கலாம். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
கும்பம்: கும்ப ராசி அதிபதி சனி. உங்களுக்கு அட்சய திருதியின் முழு அற்புத பலன் பெற சாம்பல், அடர் நீலம், கருப்பு, பழுப்பு நிற ஆடையை அணியலாம். வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த நிறங்களில் வாங்குவதால் உங்களின் கடினமான சுழலிலும் சாதக பலன் தருவதாக அமையும்.
மீனம்: மீன ராசி அதிபதி குரு. மங்களங்களைத் தரக்கூடிய அட்சய திருதியை நன்னாளில் வாகனம் வாங்க விரும்பினால் நீங்கள் உங்கள் ராசிக்கு உகந்த மஞ்சள், வெள்ளை, வைலட், தங்க நிறங்களைத் தேர்வு செய்யலாம். இந்த நிறங்கள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பரிகாரங்களும் ஆன்மிக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள ஜோதிட நிபுணர்களை அணுகலாம். “மலைஒளி” மேலே குறிப்பிட்டுள்ள தகவலை சரிபார்க்கவில்லை.