Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை குறைந்தது

அட்சய திருதியை ஒட்டி இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் சுமார் 696 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்தது.

இந்நிலையில், அட்சய திருதியை நாளான இன்று, ஒருகிராம் தங்கம் 39 ரூபாய் குறைந்து 4,816 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அட்சய திருதியை ஒட்டி இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னையில் பல இடங்களில் காலை 6 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துள்ள காரணத்தால், இன்று விற்பனை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து, மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் இன்றி ஆர்வமாகவே உள்ளனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

அதன்படி இன்று, காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.