நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து புகழ்பெற்று இருப்பவர் அமலா பால். அவரது சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவருக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் அமலா பாலை பற்றி தவறாக பேசிவிட்டார்கள் என பிக் பாஸ் போட்டியாளர்கள் இருவர் பற்றி ரசிகர்கள் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் போட்டியாளர் அக்ஷராவை பார்த்து ராஜு ‘நீங்க அமலா போல இருக்கீங்க’ என சொல்கிறார். அதற்கு அவர் தன்னை அமலா பால் உடன் ஒப்பிடுகிறார் என கோபம் அடைகிறார்.
அதன் பின் தான் தான் நாகார்ஜூனா மனைவி அமலாவை குறிப்பிட்டு சொன்னதாக ராஜு கூறுகிறார். அதன் பின் தான் அக்ஷரா ஹாப்பி ஆகி நன்றி கூறுகிறார்.
அமலா பால் உடன் தன்னை ஒப்பிட்டதாக நினைத்து அக்ஷரா கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments