Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சமந்தா சரி வர மாட்டார்.! அட்லீயின் மாஸ்டர் பிளான்.!

இயக்குனர் அட்லீ ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, ​​நயன்தாராவுக்கு முன் இப்படத்தில் முதலில் சமந்தாவை தான் நடிக்க பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவுக்கு முதலில் ‘ஜவான்’ வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா இந்த படத்தில் நடிக்காததால் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று வெளியான டைட்டில் டீசரில் ஷாருக் கான் முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்பட்டார். எந்தப் படத்திலிலும் இல்லாத தோற்றத்தில் இப்படத்தில் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2, அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.