HomeசினிமாCeleb Newsபுது காதலருடன் கட்டியணைத்து கொஞ்சும் எமி ஜாக்சன்.!

புது காதலருடன் கட்டியணைத்து கொஞ்சும் எமி ஜாக்சன்.!

நடிகை எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், தமிழ் திரைப்படங்கள் தவிர பல தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார்.

இந்நிலையில், ஏமி ஜாக்சன் காசிப் கேர்ள் என்ற தொடரில் நடித்துள்ள நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் அடிக்கடி ஒன்றாக நேரத்தை செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தற்போது, இதுவரைக்கும் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்த ஏமி ஜாக்சன் நேற்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தின் ஸ்டோரில் இருவரும் ஒன்றாக ரோமன்ஸ் செய்வது போல் ஒன்றாக இணைந்து கட்டியணைத்தபடி, இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புது காதலருடன் கட்டியணைத்து கொஞ்சும் எமி ஜாக்சன்.!

- Advertisement -

இதற்கிடையில், எமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனாயிடோ இருவரும் காதலித்து வந்தார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு திருமணத்திற்கு முன்பே செப்டம்பர் 2019 இல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் எமி.

அந்த வகையில், இருவரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர், ஆனால், ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயிட்டோ இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular