Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சுஷாந்த்சிங் முன்னாள் காதலிக்கு திருமணம்: தொழிலதிபரை மணக்கின்றார்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய முன்னாள் காதலிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விக்கி ஜெயின் என்பவரை காதலித்து வந்த அங்கிதா வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

டிசம்பர் 12, 13, 14 தேதிகளில் ஒரு தேதியில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் இந்த திருமணத்திற்கான தேதி முடிவு செய்யப்பட்டு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் அங்கீதா தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து நடிகை அங்கிதாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.