தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆலியா மானசா நடிக்க சித்து நாயகனாக நடித்து வந்தார். அர்ச்சனா வில்லியாக நடித்து வந்தார்.
கர்ப்பமாக இருந்த ஆலியா மானசா பிரசவத்தின் காரணமாக சீரியலில் இருந்து விலகிக் கொள்ள தற்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நாயகியாக நடித்து வருகிறார். ஆலியாவின் விலகல் சீரியலுக்கு பெரும் சறுக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த சீரியலில் அர்ச்சனாவாக நடித்து வந்த அர்ச்சனாவும் விலகியுள்ளார்.
தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என அர்ச்சனா பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எல்லோரும் வாழ்க்கையும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையிலும் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி பயணிக்க உள்ளேன். ராஜா ராணி 2 சீரியலை மிகவும் மிஸ் செய்வேன். இருப்பினும் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்காகத்தான் விலகுகிறேன் என காரணம் எதுவும் சொல்லாமல் அர்ச்சனா விலகியதால் ஒருவேளை அவர் திருமணம் திருமணம் செய்து கொள்ள போகிறாரா அல்லது புதிய சீரியல் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும் அவரது அடுத்த கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.