கைதி படத்தின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமியும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் இருவருக்குமே 32 வயது தான். திடீரென இவர்கள் காதல் செய்து வருவதாக பரவும் தகவலுக்கான காரணம் என்னவென்றால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் ஹார்ட் எமோஜி ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனாலே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், மற்றும் ரசிகர்கள் கோலிவுட் சினிமாவில் புதிய காதல் ஜோடி எனவும், சில சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.