அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் மனைவி ஒருவர் பயன்படுத்திய சுத்தம் செய்யும் கருவியில் விஷ பாம்பு அகப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் ஹெர்வி பே( Hervey Bay)பகுதியில் உள்ள விடுமுறை தின விடுதியில் சுற்றுலாவுக்கு வந்த பெண் ஒருவர் தரையை சுத்தம் செய்யும் கருவியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது அதில் சிறிய மஞ்சள் தலை சாரை பாம்பு ஒன்று சிக்கியது.
இதை தொடர்ந்து ஹெர்வி பே-வில் உள்ள ட்ரூ காட்ஃப்ரே (Drew Godfrey) என்ற பாம்பு மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்பு குழுவினருக்கு முதலில் அந்த பெண் தகவல் தெரிவித்து இருந்த நிலையில், பின் உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மீண்டும் மீட்பு குழுவினருக்கு தொடர்பு கொண்டு சிறிய பாம்பு ஒன்று சுத்தம் செய்யும் கருவிக்குள் சிக்கி இருப்பதாகவும், அதனால் தற்போதைக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிறிய மஞ்சள் தலை சாரை பாம்புனை பத்திரமாக மீட்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
அத்துடன் சுத்தம் செய்யும் கருவியில் இருந்து பாம்பினை மீட்கும் வீடியோ காட்சியையும் மீட்பு குழுவின் ட்ரூ காட்ஃப்ரே அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.