பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்றார் அஸூம்..!

பிக்பாஸ் சீசன் 6

தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 6ம் சீஸனின் பைனல் நேற்று ஒளிபராக்கியது .

இறுதி வாரத்தில் கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எலிமினேட் ஆனார்.

அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இந்த சீசனில் இதுவரை இருந்தனர் .

இதையடுத்து போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது .

இந்நிலையில் ஷிவின் கடைசியாக எலிமினேட் செய்யப்பட்டார் . இதையடுத்து வெற்றி கோப்பை விக்ரமனுக்கா அல்லது அஸிமுகா என்ற எதிர்பார்ப்பு நிலவியது .

வழக்கம் போல் இருவரையும் மேடைக்கு அழைத்த கமல்ஹாசன் இருவரின் கைகளை பிடித்து அனைவரும் பதற்றத்துடன் இருந்த நேரத்தில் அஸீமின் கையை உயர்த்தி அவரை வெற்றியாளராக அறிவித்தார்.

வாக்குகளின் அடிப்படையில் அஸூம் பிக் பாஸ் டைட்டிலை வென்றதாக அறிவிக்கப்பட்டது .