HomeசினிமாTelevisionபாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட் - கோபி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட் – கோபி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராதிகாவிற்கு குடித்து விட்டுச் சென்ற கோபி தன்னை புரிந்து கொள்ளுமாறு அவரிடம் கெஞ்சி ராதிகா டிராமா போடாதீங்க என கோபமாக பேசுகிறார்.

உனக்கு என்ன என்னுடைய குடும்பத்தை பார்க்கணும் அவ்வளவுதானே இப்போதே கூட்டிட்டு போகிறேன் என ராதிகாவை கையை பிடித்து இழுத்த கோபி குடிபோதையில் கீழே விழுந்து விடுகிறார். பிறகு இப்போதைக்கு போக வேண்டாம் நான் புல்லா குடிச்சி இருக்கேன் என சொல்லிவிட்டு தன்னுடைய மொபைல் போனில் பாக்கியா உடனிருக்கும் போட்டோவை எடுத்து காண்பிக்கிறார். இதப்பாரு இதுதான் என்னுடைய குடும்பம் என்னுடைய குடும்பத்தார் பார்க்கனும்னு சொன்னயே பார்த்துக்கொள் என கூறுகிறார்.

- Advertisement -

ராதிகா திரும்பி பார்க்காமல் இருக்க எழுந்து சென்று ராதிகாவின் முகத்துக்கு நேராக போனை நீட்டுகிறார் கோபி. கோபி தன்னுடைய தோழி பாக்கியா உடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ராதிகா. இது டீச்சர் என சண்டை ஆமாம் பாக்கியா தான் என்னுடைய மனைவி என கூறுகிறார். பிறகு இனியா உடன் இருக்கும் போட்டோவை காட்டி இனியா என்னுடைய பொண்ணு என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட் -  கோபி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா!

- Advertisement -

அதன்பிறகு செழியன், எழில் என்னுடைய பசங்க. இது எல்லாம் உனக்காகத்தான் மறைத்தேன். நீ என்னை விட்டுப் போயிடக் கூடாதுன்னு தான் மறைச்சேன் என கூறுகிறார். நான் அந்த குடும்பத்தோடு சந்தோஷமா இல்ல என்ன புரிஞ்சிக்கோ நீயும் மயூவும் தான் எனக்கு வேண்டும் என சொல்லி ராதிகாவின் கையை பிடிக்க உடனே ராதிகா நீங்க பொய் பொய் பொய் என கூறுகிறார்.

எவ்வளவு பெரிய உண்மையை என்கிட்ட இருந்து வச்சிருக்கீங்க அதை மறைக்க எத்தனை டிராமா என கூறுகிறார். பிறகு கோபியை வெளியே போகச் சொல்கிறார் ராதிகா. ஆனால் கோபி நான் போகமாட்டேன் இங்கதான் இருப்பேன் இதுதான் என்னுடைய வீடு என சொல்ல கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதறி அழுகிறார் ராதிகா.

இந்த பக்கம் பாக்கியா வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ராதிகா வீட்டைவிட்டுத் அடுத்த நிலையில் காரில் வந்து நடுரோட்டில் நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார் கோபி. இந்த நேரத்தில் அவருடைய நண்பர் போன் செய்ய போனை எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். பிறகு அவருடைய நண்பர் பாக்யாவுக்கு போன் செய்து கோபி வீட்டுக்கு வந்துட்டான் எனக் கேட்க இன்னும் வரவில்லை என சொல்கிறார்.

என்ன விஷயம் ஏதாவது சொல்லனுமா சொல்லுங்க என கேட்க இல்ல அவன் ஃபுல்லா குடிச்சி இருந்தான் கார் ஓட்ட வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேட்காம கிளம்பி வந்துட்டேன். அதுதான் வீட்டுக்கு வந்து விட்டானா என கேட்டு என சொல்ல இன்னும் வரவில்லை என பாக்கியா அதிர்ச்சியையும் கூறுகிறார்.

அவன் கிளம்பி நேரத்தை வைத்து பார்த்தால் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரமாக வேண்டும் என சொல்வதை கேட்டு பாக்கியா பதற்றம் அடைகிறார். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என நினைத்து அமைதியாக இருக்கிறார்.

பிறகு எல்லோரும் படுக்கச் சென்று விட இனியாவையும் மேலே அனுப்பி வைக்கிறார். இந்த பக்கம் ராதிகா டீச்சர் உடைய கணவருடன் இவ்வளவு பழகிட்டு விடும் என நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular