பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல தருணங்கள் அரங்கேறி வருகின்றன. இப்போது ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்கு பிறகும் காதலை தொடரும் கோபி – ராதிகா கதாபாத்திரத்தால் சீரியல் டி. ஆர்.பி எகிறி கொண்டிருக்கிறது.
இதில் பாக்கியாவை ஏமாற்றும் கணவர் வேடத்தில் கோபியாக நடிகர் சதீஷ் நடிக்கிறார். அதே போல் இவரின் முன்னாள் காதலியாக ராதிகா ரோலில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா நடித்து வருகிறார்.
திருட்டு தனம் செய்வது, குடும்பத்தை ஏமாற்றுவது, மாட்டிக் கொள்ளாமல் எஸ்கேப் ஆவது என கோபியின் தகிடுதத்தம் சீரியலில் அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பின்பு மகா சங்கமம் எபிசோடில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கதைப்படி தற்போது ராதிகாவுக்கு கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. அதே போல் பாக்கியாவுக்கும் எல்லா உண்மைகளும் தெரிய அவர் வீட்டை விட்டு வெளியேற, கடைசியில் கோபிக்கு பாக்கியா டைவர்ஸ் தந்து விட்டார்.
டைவர்ஸ் தந்து விட்டு பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். சீரியலில் கோபியும் பாக்கியாவும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாக்கியாவும் கோபியும் பட்டுப்புடவை, பட்டு வேட்டியில் வீட்டில் சேர்ந்து சாமி கும்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானது.
இதனால் ரசிகர்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டது போல் சீரியலில் ட்விஸ்ட் வர போகிறது என தவறாக நினைத்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த புகைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் சீரியலில் வரும் காட்சி இல்லை, கோபி – பாக்கியா இருவரும் விளம்பரம் ஒன்றுக்காக சேர்ந்து நடித்த காட்சிகள் என்பது தெரிய வந்துள்ளது.