Malayagam
Home » மொத்தமாக பறிபோன பணம்.‌‌. கதறியழும் பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் ‌

மொத்தமாக பறிபோன பணம்.‌‌. கதறியழும் பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் ‌

எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் சமையல் ஆர்டர் செய்து முடித்த பாக்யாவுக்கு 3 லட்சம் சம்பளம் போடப்பட்டது. பணத்தை அனைவருக்கும் இன்று கொடுக்கிறேன் என்று கூறியிருந்த பாக்கியா எழிலை கூட்டி கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.

நேற்று பேங்கில் இருந்து பேசுவதாக போலி போன் கால் கொண்டுவந்து பாக்யாவின் பணத்தை திருடிய நிலையில் இன்று பேங்கிற்கு சென்ற பாக்கியத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

பேங்கில் பணம் இல்லை எனக் கூறி அனுப்பி விடுகின்றனர். நான் பணம் எடுக்க வில்லை என அதிர்ச்சியான பாக்கியா ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுத்து விட்டு வருகிறார். பாக்யாவின் வீட்டில் சமையல் செய்த பெண்கள் அனைவரும் பணத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரிடமும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பாக்கியா அதிர்ச்சியுடன் நிற்க ஏறி டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக பணத்தை எடுக்க முடியவில்லை. இரண்டு நாட்களில் அம்மா பணம் தந்து விடுவேன் என கூறி அவர்களை சமாதானம் செய்கிறார். இரண்டு நாளில் பணம் வரவில்லை என்றால் நடப்பதே வேறு என்று பெண்கள் மிரட்டி விட்டு செல்கின்றனர்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்த பாக்கியா குடும்பத்தாரிடம் நடந்ததை கூறுகிறார். கோபி அவரை திட்டுகிறார். பேங்கில் போடப்பட்ட பணம் எப்படி இல்லாமல் போகும்? என திட்ட அவருடன் சேர்ந்து ஈஸ்வரியும் திட்டுகிறார். பின்னர் ஜெனி நீங்கள் யாருக்காவது கார்டு நம்பர் அது போன்ற ஏதாவது கொடுத்தீர்களா என கேட்கிறார். பாக்கியா இல்லையென கூற செல்வி அக்கா நேத்து ஒருத்தரிடம் போன்ல கார்ட்டுல இருக்க நம்பர் எல்லாம் சொல்லிட்டு இருந்தியே என கூறுகிறார்.

அதன் பின்னர் எழில் என்ன ஏதென விசாரிக்க நடந்ததை கூறுகிறார் பாக்கியா. அப்படி எல்லாம் குடுக்க கூடாது என் வீட்டில் உள்ளவர்கள் கூற என் பணம் மொத்தமும் போச்சா என் உழைப்பு போச்சா என கண்ணீர் விட்டு கீழே விழுந்து அழுகிறார் பாக்கியா. இந்த நேரத்தில் மளிகை கடைக்காரர் பொருட்களுக்கான பணத்தை கேட்க அவருக்கும் இரண்டு நாளில் பணம் தருவதாக கூறி அனுப்புகிறார் எழில்.

கோபி ஒன்னும் தெரியாம மண்ணு மாதிரி இப்படி பணத்தை இழந்து நிற்கிற என்று திட்டித் தீர்க்கிறார். உன்னால வீட்ல ஒருத்தருக்கு ஆச்சு நிம்மதி இருக்கா?? பிசினஸ் செய்வது எப்படி தொடங்கிய நாளிலிருந்து தினம் தினம் பிரச்சனை தான் என திட்டுகிறார். பாக்கியா கதறி அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed