Malayagam
Home » பெண்கள் பற்றி என்ன சொல்கிறது பகாசூரன் – இதோ விமர்சனம்

பெண்கள் பற்றி என்ன சொல்கிறது பகாசூரன் – இதோ விமர்சனம்

Bakasuran Movie Review: பகாசூரன் விமர்சனம்

Bakasuran Movie Review: பகாசூரன் விமர்சனம்

செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருக்கின்ற “பகாசூரன்” திரைப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரெளபதி என பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ஜி இயக்கியிருக்கிறார்.

சாம் சி எஸ் இசையமைத்திருகிறார். நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ, என பலர் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

கதைக்களம் :

முன்னாள் ராணுவ அதிகாரியான அருள்வர்மன் (நட்டி நட்ராஜ்) நாட்டுக்கு சேவை செய்து களைத்த கையுடன் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் வீடியோக்களாக்கி வியூஸ்களை குவிக்கிறார்.

அந்த காரணத்தைக் கண்டு மிரண்டு போன நட்டி இதே போன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க அவர்களின் பாதிக்கப்பட்ட தந்தையை தேடி அழைகிறார். அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குனர் செல்வராகவன்.

Bakasuran Movie Review: பகாசூரன் விமர்சனம்

சாம் சி எஸ் இசை நாற்றாகவே படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. திரைக்கதை சரியாக இருந்தாலும் வசனம் ஆங்காங்ககே சரியாக இல்லை, அதே போன்று பெண்களை பாதுகாக்க வேண்டும் என சொல்லும் இயக்குனர் மோகன் ஜி படத்தில் ஆபாசமான நடனம் வைப்பது என்னவென்று சொல்வது.

படத்தின் முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி சொல்லவரும் கருத்து வந்தாலும் பெண்களின் உரிமை மற்றும், பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது காதல் தான் என்பது போல சித்தரித்தது சரியாக இல்லை. படத்தில் தந்தை மகள் பாசம் பாடல் வருகிறது. ஆபாசமாக பெண்களை படமெடுத்து மிரட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கி தராமல் பெண்கள் சரியாக இருந்தால் இந்த பிரச்சனை வராது என கூறுவது இயக்குனர் மோகன் ஜிக்கே வெளிச்சம்.

பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் வருகின்றன, குறிப்பாக ஓய்வு பெற்ற மேஜர் நட்டி ஆதாரங்களை தேடி அழையும் போது தொடர்ந்து கொலைகளை செய்து விட்டு செல்கிறார் செல்வராகவன். இவர்களுக்கு இடையே காவல் துறை ஓன்று இருக்க என தோன்றுகிறது.

Bakasuran Movie Review: பகாசூரன் விமர்சனம்

மற்றபடி இணையத்தில் ஏற்படும் சில பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. கதையில் சில இடங்களில் பிற்போக்கு தனம் இருந்தாலும் கதை ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.

மோகன் ஜி இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் பேசுபொருளாக்கி இருக்கிறது. அதிலும் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை டார்கெட் செய்தது போலவே இருந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது தவறு, செல்போன் பயன்படுத்தினால் தவறு, அறிவில் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானது என்பது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஒரு படமாக இப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் முதல் பாதி ஓகே இரண்டாம் பாதி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed