bayilvan ranganathan about kamal haasan’s night party: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யாவும் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ்
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
பயில்வான் ரங்கநாதன்
தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படக்குழுவினருக்கு இரவு விருந்து கொடுத்தது குறித்த தகவலை பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
படு கவர்ச்சியான உடை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட குழுவினருக்கு தனது பங்களாவில் இரவு விருந்து அளித்தார். இதில் படக்குழுவினருடன் சேர்ந்து நடிகை ஆண்ட்ரியாவும் பங்கேற்றார். படு கவர்ச்சியான ஆடை அணிந்து பார்ட்டியில் கலந்து கொண்டார் ஆண்ட்ரியா.
ரசித்த கமல்
மேலும் அந்த உடையில் கமலுடன் நெருக்கமாக நின்ற ஆண்ட்ரியா, அவரையே சுற்றி சுற்றி வந்தார். இதனை நடிகர் கமல்ஹாசனும் ரசித்தார். நடிகை ஆண்ட்ரியா விக்ரம் படத்தில் நடிக்கவே இல்லை. ஆனால் விக்ரம் படக்குழுவினருக்கு அளித்த பார்ட்டியில் அவர் பங்கேற்றார். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.