Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்… ஆண்களே… இன்னைக்கே வாங்கிடுங்க!

இந்த 9 சென்ட் மணம்

நிறைய நிறுவனங்கள் தங்களுடைய சென்ட் எனப்படும் வாசனை திரவிய விளம்பரங்களில், பெண்களை கவர்வது பேன்றே உருவாக்கி இருப்பார்கள்.

அப்படி வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண்கள் மயக்குவார்களா? என்றால் அதற்கான வாய்ப்பு வெறும் 50 சதவீதம் என கூறப்படுகிறது.

ஆனால் மீதமுள்ள 50 சதவீத பாசிட்டிவ்வை ஏன் கைவிட வேண்டும் என நினைப்பவர்களுக்காக, ஆண்கள் பயன்படுத்தக்கூடிய 9 வகையான நறுமணங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

மல்லிகை

மணம் வீசும் மல்லிகை பூவை விரும்பாதவர்களும் உண்டோ?. மலர்கள் எப்போதுமே தனது நறுமணத்தை இனச்சேர்க்கைக்காக பயன்படுத்துகின்றன. மேலும் மலர்களின் கவர்ச்சிக்கு காரணமாக அவற்றின் நறுமணம் விளங்குகிறது. அப்படி மலர்களிலேயே அதிகம் மணம் வீசும் பூவான மல்லிகை வாசம் கொண்ட சென்ட், ஆண், பெண்ணுக்கு இடையே நெருக்கம் மற்றும் காதலை அதிகரிக்க கூடியது என கூறப்படுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

ரோஜா

ரோஜா பூவை பற்றி சிந்தித்தாலே அது காதலர்கள் அன்பை பறிமாறிக்கொள்ள பயன்படுத்துவது தான் நினைவிற்கு வரும். அழகான, தனித்துவமான இந்த மலரின் நறுமணம் கொண்ட வாசனை திரவியங்கள், ஒருவருக்கு ஆழமான மற்றும் தூய்மையான காதல், அன்பு மற்றும் சிற்றின்பத்தை நினைவூட்டுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

கஸ்தூரி

‘மான் வயிற்றில் பிறக்க கூடிய மணம் வீசும் அரிதாரம்’ என கஸ்தூரியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நான்மணிக்கடிகையில் நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நறுமணம் வீசும் பொருட்களில் முக்கியமான இது சில வகை தாவரங்கள் மூலமாகவும், செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. கஸ்தூரி வாசம் கொண்ட வாசனை திரவியத்தை பயன்படுத்துவது காமம் மற்றும் ஆசையை அதிகரிக்க உதவுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

சம்பங்கி

இந்த பூவில் இப்படியொரு மணமா என நுகர்ந்தோரை மயங்க வைக்கும் மலர் சம்பங்கி. இதன் வாசனையை ஒத்த சென்ட்களை ஆண்கள் பயன்படுத்தினால், அது பெண்களுக்கு அவர்களது சிற்றின்பத்தை நினைவூட்டும் எனக்கூறப்படுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

வெண்ணிலா

இந்த மணம் அப்பாவித்தனமும் அன்பும் நிறைந்த, மிகவும் அடிமையாக்கும். மேலும் மண் சார்ந்த மற்றும் அழகான நறுமணமாகும்.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

சந்தனம்

வாசனை திரவியங்கள் பற்றி பேசும் பட்டியலில் சந்தனத்திற்கு கட்டாயம் தனி இடம் உண்டு. மரவகையை சேர்ந்த இதன் கட்டைகளை கல்லில் தேய்ந்தால் அற்புதமான நறுமணத்துடன் கூடிய சாந்து கிடைக்கும். பண்டைய காலங்களில் சந்தனம் நறுமணத்திற்காகவும், அழகிற்காகவும் அரசு பரம்பரையைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. சந்தனத்தின் நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை ஆண்கள் பயன்படுத்துவது அவர்கள் பெண்களை எளிதாக ஈர்க்க உதவுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

கருப்பு அதிமதுரம்

இந்த வாசனை ஒருவரின் விழிப்புணர்வை அதிக சதவீதம் வரை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அதன் சுவையை போலவே வாசனையும் பலரையும் கவர்ந்திழுக்க கூடியது. ஆரஞ்சு வாசனை கொண்ட சென்ட் பயன்படுத்தினால், அதன் நறுமணம் பாலுறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உணர்ச்சியை தூண்டும் என கூறப்படுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்

லாவண்டர்

பொதுவாக லாவண்டர் வாசனை மனச்சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், மன நோய் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடியது. மேலும் இதன் இனிமையான மற்றும் பழ வாசனை ஒரு நொடியில் உங்கள் மனிதனை மாற்றிவிடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

https://www.youtube.com/watch?v=um6wivycnIU&t=6s