Mon, Dec5, 2022

#Trending

96 வயதிலும் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் ராணி எலிசபெத்தின் பியூட்டி ரகசியம் இதுதான்..!

பிரிட்டன் ராணியாக தன்னுடைய 25 வயதில் அரியணை ஏறிய நாள் முதல் 96 வயது வரை தன்னுடைய அழகிலும், ஆரோக்கியத்திலும் அக்கறையுடன் வாழ்ந்து வந்தார் ராணி எலிசபெத்.

அழகா இருக்கேன்னா? என எதார்த்தமாக யாரிடம் கேட்டாலும் நீ என்ன பெரிய எலிசபெத் ராணியா? எனப் பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆம் அந்தளவிற்கு அத்தனை அழகையும் தனக்கே கொண்டு வலம் வந்தவர் தான் பிரிட்டன் ராணி எலிசபெத்.

 பியூட்டி ரகசியம்

பிரிட்டனின் மகாராணியாக தன்னுடைய 25 வயதில் பதவியேற்று 70 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பிலிருந்தவர், உடல் நலக்குறைபாடு காரணமாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இவர் ஆட்சிப் பொறுப்பிலிருந்த சமயத்தில் 15 பிரிட்டன் பிரதமர்களைப் பார்த்ததோடு பல முக்கிய நிகழ்வுகளையும் எதிர்கொண்டுள்ளார்.

ராணியாகப் பதவியேற்ற நாள் முதல் அரசுப்பணிகளை நேர்த்தியாகப் பார்த்து வந்தபோது தன்னுடைய அழகைப் பராமரிப்பதிலும் மிகுந்த அக்கறையோடு இருந்துள்ளார். கலர் கலர் ஆடைகள், விலை உயர்ந்த கற்கள் பதித்த தொப்பிகள், ராணிக்கான கிரீடம் என வசீகரம் குறையாமல் கடைசி வரை மிடுக்கான தோற்றத்துடன் வலம் வந்தார்.

இதற்குக் காரணம் கடைசி வரை ஒரே மாதிரியான அழகு சாதனப்பொருள்களை உபயோகித்தது தான் என்கின்றனர். அவை என்னென்ன என்பது குறித்து எங்கே அறிந்து கொள்வோம்.

 பியூட்டி ரகசியம்

ராணி எலிசபெத் தன்னுடைய அழகைப் பராமரிப்பதற்காக கிளீனிங், டோனிங், மாய்ஸ்சரைசர் போன்ற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளார். அரண்மனை தெரிவித்த தகவலின் படி, ராணியின் மென்மையான கிரீம்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் ஹலோ பத்திரிக்கையின் படி, (yardley London) யார்ட்லி லண்டன் லாவண்டர் சோப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறார். இந்த சோப்புகள் தான் அதிகளவில் அரண்மனையில் இருந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிடித்த வாசனைத் திரவியம்: ராணி எலிசபெத்திற்கு ப்ளோரிஸ் லண்டன் (floris london )என்ற வாசனைத் திரவியம் தான் எப்போதும் பிடிக்குமாம்.

 பியூட்டி ரகசியம்

மெனிக்யூர்: தன்னை அழகாக வைத்துக் கொள்ள விரும்பும் எலிசபெத் ராணி , எப்போதும் நகங்களை வெட்டி மெனிக்யூர் செய்யும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருப்பார். இதோடு அணியும் ஆடைகள், காலணிகளுக்கு ஏற்றவாறு நெயில் பாலிசும் அடிப்பாராம். மேலும் ஷவர் ஜெல், தனித்துவமான லிப் ஸ்டிக் போன்றவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் ராணி எலிசபெத்திடம் அதிகளவிலிருந்துள்ளது.

இவ்வாறு தன்னுடைய அழகில் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்திலும் தனிக்கவனத்துடன் இருந்து வந்துள்ளார் ராணி எலிசபெத். ப்ரஷ்ஷான காய்கறிகளோடு சமைக்கும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ராணி தன்னுடைய அரண்மனையில் தனக்குரிய உணவுகளைச் சமைப்பதற்காகவே பிரத்தியேக சமையல் கலைஞர்களை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities