Sat, Mar6, 2021
Home அழகு குறிப்புகள் முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...

முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க…

- Advertisement -

பொதுவாக நம்மில் பலரும் பருக்கள் கோடைக்காலத்தில் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் குளிர்காலத்திலும் முகப்பருக்கள் வரக்கூடும்.

முகப்பருக்கள் வர ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முக அழகே பாழாகிவிடும்.

முகப்பருக்கள் வருவதைத் தடுக்க கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.

முகப்பருக்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நமது வீட்டுச் சமையலறையிலேயே மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட பொருட்கள் பல உள்ளன.

உங்களுக்கு குளிர்காலத்திலும் முகப்பருக்கள் வந்து கடுப்பேற்றினால், அதைக் கட்டுப்படுத்த அந்த பொருட்களால் பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுத்து வந்தாலே போதும்.

முக்கியமாக இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது, சருமமும் ஆரோக்கியமாக மற்றும் பொலிவாக இருக்கும்.
இப்போது குளிர்காலத்திலும் வரும் முகப்பருக்களைப் போக்க உதவும் சில சமையலறைப் பொருட்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் காண்போம்.

மஞ்சள்

மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது குளிர்காலத்தில் வரக்கூடிய முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவும். அதற்கு சிறிது மஞ்சள் தூளை எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வராமல் இருப்பதோடு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.

தேன்

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு இயற்கை சுவையூட்டி மட்டுமின்றி, சருமத்தை சுத்தம் செய்யும் மற்றும் தீங்கு விளைவிக்கும் சரும பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அற்புத பொருளும் கூட. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் சிறிது தேனை முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் முகத்திற்கு தேனை பயன்படுத்தி வந்தால், முகம் பருக்களின்றி பட்டுப்போன்று மிருதுவாக இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய எலுமிச்சை சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் திறனையும் கொண்டது. அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை தேன் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து முகத்தில் நேரடியாக தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவினால், பரு பிரச்சனை வராமல் இருப்பதுடன், முகமும் பளிச்சென்று காணப்படும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் இருப்பதால், இது பருக்களுடன் தொடர்புடைய வீக்கத்தை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பேக்கிங் சோடாவை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, 30 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால், வீங்கி அசிங்கமாக காணப்படும் பருக்கள் விரைவில் சுருங்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி, ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதம் மற்றும் பிற சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கக்கூடியதும் கூட. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ளன. அதற்கு க்ரீன் டீ தயாரித்த பின், அந்த டீ தூளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...