Wed, Feb24, 2021
Home அழகு குறிப்புகள் உங்க அந்தரங்க பகுதி கருப்பா இருக்கா? வெள்ளையாக்கும் சில எளிய வழிகள்!

உங்க அந்தரங்க பகுதி கருப்பா இருக்கா? வெள்ளையாக்கும் சில எளிய வழிகள்!

பெண்கள் எதிர்கொள்ளும் மிகவும் தர்மசங்கடமான அழகு பிரச்சனைகளுள் ஒன்று அந்தரங்க பகுதி கருமையாக இருப்பது. அந்தரங்க பகுதி கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் உராய்வு, அரிப்புக்கள், இறுக்கமான ஆடைகள், வியர்வை மற்றும் ஹார்மோன்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்தரங்க பகுதி என்று கூறும் போது, அதில் பிறப்புறுப்பு மட்டுமின்றி தொடையின் உள் பகுதியும் அடங்கும்.

இப்படி கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டும் எளிதில் சரும கருமையைப் போக்கலாம். கீழே கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தயிர் – தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதோடு, இது அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தணிக்கவும் உதவும். அதற்கு தயிரை தினமும் கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கடலை மாவு – கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கருப்பான அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் – கற்றாழையில் கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதோடு, கருமையான சருமத்தை வெள்ளையாக்கவும் செய்யும். அதற்கு கற்றாழை ஜெல்லை அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள் – சரும கருமையைப் போக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அழகுப் பொருள் தான் மஞ்சள். மறுபுறம், ஆரஞ்சு ஜூஸ் ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும். அதற்கு 3 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் மற்றும் சந்தன பவுடர் – பொதுவாக சந்தனம் சரும கருமையைப் போக்கக்கூடியது. ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையான அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உருளைக்கிழங்கு – உருளைக்கிழங்கை வெட்டி, கருமையான அந்தரங்க பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையான பகுதியை வெள்ளையாக்க உதவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

குடி போதையில் த்ரிஷா… இதுவரை பலரும் பார்த்திடாத மறுபக்கம்..!

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம்...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...