போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அவர்கள் கதையை சொல்லி வரும் நிலையில் சுருதி இன்று பேசினார். ‘என் அம்மா அப்பாவுக்கு இரண்டாம் தாரம்’ என கதையை சொல்ல தொடங்கினார்.
“என் அப்பாவுக்கு முதல் திருமணத்தில் ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் முதல் மனைவி இறந்துவிட கஷ்டப்படுகிறரே என என அம்மாவை அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.”
“வறுமையில் இருந்த என் தாத்தா குடும்பத்திற்கு அவர் உதவி செய்து இருப்பதால் அவருக்கு என் அம்மாவை சின்ன வயதில் கட்டிக்கொடுத்துவிட்டார்கள்.
மிகப்பெரிய வயது வித்தியாசம், என் அம்மா அழகாக இருப்பார், அதனால் அவருக்கு சந்தேகம். எங்களை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தான் செல்வார். சில நேரங்களில் எங்களை வெளியில் கூட அனுப்பிவிடுவார்.”
“எனக்கு வாரிசு இருக்கிறது, உனக்கு வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள் என என் அம்மாவிடம் அவர் கூறி இருக்கிறார். அதனால் நான் அவருக்கு தேவையில்லாத குழந்தை தான்.
என்னை தொட்டு கூட அவர் பேசியதில்லை. ஒருநாள் அவர் இறந்துவிட்டார், அப்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இறுதி சடங்கு காரியம் ஒரு 15 நாள் நடந்தது, அப்போது தான் நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.”
“அவர் இறந்தபிறகு எங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்தேன். ஆனால் அதன் பின் வறுமை தான் வந்தது. மூன்று வருடமாக நாங்கள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டோம். அப்போது ஒரே ஒரு அண்ணன் மட்டும் உதவினார். பணம் இல்லை, உதவி செய்யவும் யாரும் இல்லை.. ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருந்தோம்.”
“நான் படிக்கும்போது எனக்கு ஸ்போர்ட்ஸில் வாய்ப்பு கிடைத்தது, அதை பயன்படுத்தி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சென்னையில் பிடெக் சேர்ந்தேன். நான் படித்து வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலை இருந்ததால் நான் வெறிகொண்டு படித்தேன்.
படித்து முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் 6 நிறுவனங்களில் தேர்வானேன். எந்த நிறுவனம் என நான் தேர்வு செய்து ஒரு FMCG நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு இரண்டு வருடம் பணியாற்ற எனக்கு எந்த வளர்ச்சியும் இல்லை என உணர்ந்தேன்.
அதை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து வேலை தேடினேன், உடனே கிடைக்கவில்லை. அதன் பின் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்தேன்.”
“அந்த நேரத்தில் தான் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. கடவுள்கள் கருப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என கேலண்டர் போட்டோஷூட்டில் பங்கேற்றேன். அதில் லட்சுமியாக நான் போஸ் கொடுத்தேன்.
அந்த போட்டோ அந்த நேரத்தில் அதிகம் வைரல் ஆனது. அதன் பின் வளர்ந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்” என சுருதி கண்ணீருடன் கதையை சொல்லி முடித்தார்.
கதை கேட்டு எமோஷ்னல் ஆன போட்டியாளர்கள் பலரும் அவருக்கு லைக், ஹார்டின் கொடுத்தனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.