Mon, Dec5, 2022

#Trending

இது தமிழ் பிக் பாஸ் தானா? பிக் பாஸ் 5 முதல் நாள் விமர்சனம்…!

பிக் பாஸ் 5ல் இன்று முதல் நாள், அதனால் போட்டியாளர்கள் பேசி பேசி மற்றவர்களுடன் பழக தொடங்கி இருக்கின்றனர். அதனால் மொத்த முதல் நாள் எபிசோடும் ஜாலி மூடில் தான் இருந்தது.

முதல் நாளே டிக்கிலோனா படத்தின் “பேரு வெச்சாலும், வெக்காம போனாலும்” பாடல் போடப்படுகிறது. அதற்கு அனைவரும் டான்ஸ் ஆடுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ‘positive’ என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என அக்ஷரா கேட்க மற்றவர்கள் பதில் தெரியாமல் முழிக்கின்றனர். அப்போது இமான் அண்ணாச்சி தான் வந்து விளக்கம் கொடுக்கிறார். எப்போது வேண்டுமானாலும் என்கிட்டே கேளுங்க என கூறிவிட்டு போகிறார்.

இந்த சீசனில் பல போட்டியாளர்கள் வெளிநாட்டில் இருந்து வந்த மாடல் பெண்கள் என்பதால் பலருக்கும் தமிழ் சரிவர தெரியவில்லை. ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் மதுமிதாவிடம் பிரியங்கா பேசுகிறார். தனக்கு இலங்கை தமிழ் ஸ்லாங் அதிகம் பிடிக்கும் என கூறுகிறார். அதனால் அதே போல என்னிடம் பேசுங்க எனவும் கேட்கிறார்.

அக்ஷரா எப்போது அழகாக சிரித்துக்கொண்டே இருப்பது கியூட்டாக இருப்பதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சிலரே கூறுகின்றனர். “நீங்க பாக்க அமலா போலவே இருக்கீங்க” என ராஜு சொல்கிறார். அவரோ அமலா பால் என நினைத்து எதுவும் பதில் சொல்லாமல் நிற்கிறார்.

“நாகார்ஜூனா wife அமலா எவ்ளோ பெரிய நடிகை, நான் இப்படி சொன்னதற்கு நன்றி சொல்லணும்” என ராஜு சொல்ல அதன் பின் தான் அவர் ஹேப்பி ஆகி நன்றி கூறுகிறார்.

சுருதி, ஐக்கி பெரி முடியை பார்த்து நீங்க ரெண்டு பேரும் என்ன சிங்கப்பூரா என கேட்கிறார் ராஜு. அதன் பின் ஐக்கி தஞ்சாவூர் எனவும் சுருதி சேலம் எனவும் தெரியவர சற்று சர்ப்ரைஸ் ஆகிறார். (அந்த குழப்பம் அவருக்கு மட்டும் அல்ல பிக் பாஸ் ரசிகர்களுக்கும் தான் இருக்கிறது.)

இப்படி மாடல்கள் அதிகம் பேரை கொண்டு வந்திருப்பதால் இது உண்மையில் தமிழ் பிக் பாஸ் ஷோவா இல்லை பேஷன் ஷோவா என நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பிக் பாஸ் எல்லோரையும் அழைத்து லிவிங் ஏரியாவில் அமர வைத்து, இந்த வாரத்தின் தலைவரை தேர்வு செய்ய உள்ளதாக சொல்கிறார். விருப்பம் இருப்பவர்கள் முன் வரலாம் என பிக் பாஸ் சொல்ல மொத்தம் ஐந்து பேர் வந்து நிற்கின்றனர்.

ராஜு – பாத்ரூம்

நமீதா – பாத்திரம் கழுவுவது

சின்னப்பொண்ணு – சமையல்

இப்படி மூன்று பேர் மூன்றை தேர்வு செய்து விட்டனர். அதனால் கடைசியாக இருக்கும் க்ளீனிங் தான் செய்வதாக பாவனி கூறுகிறார். அடுத்து இருக்கும் நிரூப் தேர்வு செய்ய எதுவுமே இல்லை, அதனால் அவரும் க்ளீனிங் செய்ய இருப்பதாக சொல்கிறார். ஆனால் ஒரு தலைவர் தான் இருக்க முடியும் என பிக் பாஸ் ஸ்ட்ரிக்ட் ஆக கூறுகிறார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities