Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பிக் பாஸ் சீசன் 6ல் சர்ச்சை நடிகை? டி.ஆர்.பிக்காக இப்படியொரு முடிவா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 6ல் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

திடீர் பேட்டி, சர்ச்சையான பதில், சிம்பு மேல் காதல் என வரிசையாக தொடர்ந்து இணையத்தில் பல சர்ச்சைகளை சந்தித்த ஸ்ரீநிதிக்கு பிக் பாஸ் சீசன் 6ல் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் டைட்டில் பட்டத்தை வென்றார். ஆங்கர் பிரியங்காவுக்கு 2 வது இடம் வழங்கப்பட்டது.

அதன் பின்பு பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அவர் இடையில் விலக நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் லிஸ்ட் பல்வேறு கட்ட நிலைகளுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போன சீசனில் நிறைய மாடல்கள் இருந்ததால் டி.ஆர்பியில் சின்ன சறுக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை சரிசெய்ய இந்த முறை போட்டியாளர்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் டி.ஆர்.பியை குறி வைத்து சர்ச்சை நடிகை ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.நிறுத்தப்பட்டது.