பிக் பாஸ் சீசன் 7 எப்போது? போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவல்!

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 7: தமிழ் சின்னத்திரையில் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்த சீசன் அதாவது 7வது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வருகிற அக்டோபர் மாதம் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான போட்டியாளர்களை தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

7 போட்டியாளர்கள் வரை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள போட்டியாளர்களை இன்னும் தேடி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து 6 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் 7வது சீசனையும் தொகுத்து வழங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.